Friday, July 6, 2012

புரியாத ஆசைகள்

அம்மாவுக்கும் அவனுக்கும் சண்டை அவனது மாமா பெண்ணின் முன்னிலையில் அவனை அசிங்கபடுத்தியதால் இல்லை, கண்டிப்பாக ! அவன் கடந்த சில நாட்களில் அது நடக்காது என்று புரிந்துகொண்டு இருந்தான். சண்டை போட்டுக்கொண்டு அவன் ஹோட்டல் ரூமை விடு வெளியே வந்து விட்டான் 17 வயதில் இது வரை வீடு மாடிக்கு மட்டுமே கோவம் வந்தால் சென்ற அவன் இன்று வேறு வழி இன்றி வந்து விட்டான். எங்கு செல்வது அந்த புதிய ஊரில் ? சொந்த ஊரக இருந்தாலும் அந்த இரவு 9 மணிக்கு எங்கு சென்று இருப்பன் ? மிஞ்சி மிஞ்சி போனால் மஹா லிங்கத்தின் வீட்டுக்கு போய் இருப்பன். அங்கும் அவன் போலீஸ் தந்தை அவனை திட்டி உள்ள கூப்பிட்டு விடுவார். இப்போது திருசெந்தூரில் அவன் எங்க செல்ல வேண்டும் என்பது அவனக்கு தெரிந்து தான் இருந்தது.


கடற்கரை.....இரவு 9 மணிக்கு அங்கே கூடம் இல்லை. மாலையில் அங்கு காதலர்கள் கூடி இருந்தனர் மரினா ஆளவுக்கு இல்லை என்றாலும் அந்த ஊரில் அதுவே அதிகம். பெண்ண வீட்டார் பெண்ணை அங்கு பார்த்தல் பத்து நாளில் அவளுக்கு அதே கடலில் காரியம் நடக்கும், பையனின் செல்வாக்கை பொருத்து அவன் தலை விதி தீர்மானிக்கப்படும். அவனும் கொல்லப்படலாம் இல்லை அந்த பெண்ணிற்கு காரியம் நடக்கும் பொது வேறு பெண்ணுடன், கடற்கரையில் அமர்ந்துகொண்டு, பாவம் யாரோ செத்துட்டாங்க என்று அவளிடம் அனுதபாமும் பெறலாம்.


ஆங்கானகே ஒன்றிரண்டு வயசான கிழங்கள் உக்காந்து இருந்தனர் இவர்களின் கதை என்ன என்று அவனுக்கு அப்போது தெரிந்து இருக்கவில்லை. காதல் அப்போதே அவனக்கு சினிமா மூலம் பரிட்சயம் ஆகிவிட்டு இருந்தது. அவன் எப்போதும் தனிமையை தான் விரும்பினான் என்றாலும் பெண் துணைக்கு அவ்வப்போது ஏங்கியதுண்டு. கடவுளிடம் கெஞ்சுவான் என் நண்பர்களை போல எனக்கும் ஒரு தோழி வேண்டும் என்று. அவன் அழகிற்கு பணத்திற்கு சைக்கிளுக்கு அவனுக்கு தோழிகள் கிடைக்கவில்லை. பணக்கார பெண்கள் பணக்கரர்களையே விரும்பினர். மற்ற பெண்களும் தான். குறைந்தபட்சம் அழகு என்பதாது தேவை பட்டது.


தனிமையான ஒரு இடத்தில அமர்ந்தான். கடலில் அன்று பௌர்ணமி. நிலா கடலில் பிரதிபல்லிக்க வில்லை என்றாலும் கடலலைகளை ரௌதிரபடுதிக்கொண்டிருந்தன. சில ரௌதிரங்கள் அழகு என்றுமே. சிவனின் வெறியாட்டம் அழகு என்று படித்து இருக்கிறான். இபோது கடலலை மீண்டும் மீண்டும் அடித்து கிழே விழுந்து எழுந்து உள்ள சென்று வெளிய வந்துக்கொண்டிருந்தது. காற்று இதமாக வீசியது. உப்பு காற்றாக அவன் உணரவில்லை. கோவிலில் மணிச்சத்தம் கேட்டது திரும்பிப்பாத்தான். இந்த கடற்கரை சமிபத்தில் இவ்வளவு அழகான கோவிலை கட்ட தோன்றியது யாருக்கோ. கோவில் கோபுரம் பிரமாண்டமாய் இருந்தது. கோவிலையும் கடலையும் ஒன்றுசேர இரவில் பார்ப்பது எவ்வளவு அழகு என்று சந்தோஷ பட்டான். அம்மாவை நினைத்தால் கோவம் வந்தது. எப்போதுமே அவள் பெண் தான் அவளுக்கு உசத்தி நான் எவ்ளா நியமாகா நடந்து கொண்டாலும் அவளுக்கு அவள் பெண் ஆசை பட்டது தான் முக்கியம். ஒரு வேளை அவள் பெண்ணை பெற்றுஎடுக்க ஆசைபட்டு முதலில் நான் பொறந்து அப்ரோ அவள் பிறந்தாளா ? இல்லை உண்மையிலயே அவள் சொல்வது போல என்னை தத்து தான் எடுத்து இருப்பர்களோ ? அவள் அப்படி சொல்கையில் கூட அம்மாவும் அப்பாவும் அவளை அடிக்க மாட்டார்கள். அனால் நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும் பொது இருந்த போட்டோ பாத்து இருக்கிறேனே ? ஒரு வேளை அது நான் இல்லையோ ? கண்டிப்பாக அது அவள் இல்லை ஏன் என்றால் நான் பார்த்து இருக்கிறேன் அவள் வயிற்றில் இருந்த போது. என்னவாக இருந்தால் என்ன அவளையே வைத்து கொள்ளட்டும். அவள் மீது தானே அனைவருக்கும் பாசம் ஏல்லாம். தாத்தா மட்டும் என் மீது பாசம் வைத்து உள்ளாள். ஆனால் அதற்காக திரும்பிப்போக முடியாது.


அப்போது அவன் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். மிக அருகில் இல்லை ஆனால் சற்று இடைவெளி விடு பேசும் தூரத்தில்.

"வெளியுரா தம்பி ?"

அவனக்கு தன்னை தான் கேட்டார் என தெரிந்தும் உண்மையை சொல்வதா போய் சொல்வதா என தெரியாமல் தட்டு தடுமாறி "வெளியூர் தாங்க" என்றான்.

"என்ன பண்றீங்க ?"

"சும்மா வேடிக்கை பாக்குறேன், இல்ல 11th படிக்குறேன் !"

"பௌர்ணமி நல்ல இருக்குல ? இன்னைக்கு தான் கடல் இருட்டாக இருட்டாக சத்தம் நல்லா போடும்...."

"................"

"எங்க தம்பி தங்கி இருக்கீங்க ?"

"இங்க தான் கவர்மென்ட் லாட்ஜூல "

"தனியாவா இருக்கீங்க ?"

"இல்ல அப்பா அம்மாவோட தான் வந்தேன்"

"அவங்க எல்லாம் எங்க ? தனிய உக்காந்து இருக்க ?"

"வீட்ல ஒரு சின்ன சண்ட அதான் கோச்சிட்டு வந்டேன் "

ஒரு கேள்வியாச்சி திருப்பி கேக்கணும்னு கேட்டேன் "நீங்க இந்த ஊர் தானுங்களா ?"

"ஆமா தம்பி "

இப்போது தான் அவனை முழுமையாக பார்கிறான் லுங்கி பழையது. சட்டை அழுக்கு ஏறி இருந்தது. சவரம் என்பது செய்ந்து ஒரு மாதாம் ஆகி இருக்கலாம் ஆனால் அவனுக்கு தாடி ஒன்றும் அந்த அளவுக்கு இல்லை. மீசை முடி எல்லாம் வெள்ளை. ஆள் குள்ளை.

"தம்பி நைட்டு என்ன பண்ணா போறீங்க ?"

"தெரில"

"என் கூட வரிங்களா ?"

அவனுக்கு தன்னை அந்த கிழவன் கடத்த போகிறானா ? அவன் மட்டும் தான் அங்கு இருக்கிறான் வேறு யாரும் இல்லை ! என் இடுப்பு உயரம் தான் இருப்பன் இவனால் முடியுமா ? ஒரு வேளை காதி வைத்து இருப்பானோ ? மயக்க மருந்து ? என்று அவன் யோசித்து கொண்டிருக்கையிலேயே மறுபடி சொன்னான்

"20 ரூபாய் கொடுங்க தம்பி. பொண்ணுங்கட கூட்டிட்டு போறேன் ! ஒரு நைட் புல்லா என்ஜாய் பண்ணிகொங்க, வீட்டுக்கு காலைல போய்கொங்க"

அவன் பயப்பட்டான்,யோசித்தான் பயந்தான். கடலலை அடித்து கொண்டே இருந்தது. அவனிடம் அந்த காசும் இருந்தது. அங்கு போய் என செய்ய வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியாது. சுய இன்பம் தெரியும். ஆண் பெண் சேர்ந்தால் தான் குழந்தை பிறக்கும் என்பது தெரியும். அவன் கேட்ட பெண் சகவாசம் இருக்கிறது. இப்போது அவன் கையிலேயே. அந்த கிழவன் அவனின் மன நிலையை புரிந்து கொண்டு "வாங்க தம்பி சிக்கிரம் இல்லன இலரும் புக் ஆயடுவாலுக ! காசும் அதிகம் கேப்பளுக" என்று வியாபார யுக்தி கட்டினான்.

அவன் குள்ளனின் பின்னால் நடக்க ஆரம்பித்தான். திடிரென்று அவன் மொபைல் அலறியது ! அம்மா ! எடுக்கமால் ஹோட்டல் இருந்த திசையை பார்த்து ஓட ஆரம்பித்தான், குள்ளன் திரும்பி பார்த்து விட்டு. மீண்டும் நடக்க ஆராம்பித்தான்.

No comments:

Post a Comment