போத்திஸ், என் பிறந்த நாளைக்கு ஒரு டி-ஷர்ட் வாங்கலாம் என்ற ஆசையில் போய் நின்றேன் ! ஏதும் என்னை அவ்வாறு கவரவில்லை. இந்த பிறந்த நாளைக்கு ஏதும் வேண்டாம் என்ற முடிவில் திரும்பும் பொது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி இருந்தது, இரண்டு. அதன் அருகே என்னை போலவே ஒரு இளைஞன் நின்றிருந்தான். அவனுக்கு வேலை இருந்தது எனக்கு வேலை இல்லை ஆனால் நான் அங்கு முதலாளி அவன் தொழிலாளி, எங்களுக்குள் உள்ள வித்தியாசம் அவ்வளவே.
அதில் ஒன்று 10 மற்றொன்று 12.
ஒன்று சச்சினுடையது மற்றொன்று யுவராஜினது. நான் சிறு வயதிலிருந்தே இடது கை ஆட்டக்காரன் ஆகையால் எனக்கு யுவி பிடிக்கும் ! அவனின் கோபம் மிகவும் ( நான் அவ்வாறு கோபப்பட்டது இல்லை ! அதானால் கூட இருக்கலாம், கங்குலியையும் சேர்த்துக்கொள்வோம் ) கிரௌண்டில் எப்போதும் முட்டி போட்டு யுவி போல சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து அவ்வப்போது அது பலித்து அல்லது பேட்டில் பட்டு நான் சுற்றும் சுற்றில் போய் விழுந்து விடும் !
இப்போது கடைக்கு திரும்ப வருவோம். அந்த சகா நான் ரெண்டையும் எடுப்பதை பார்த்து எது வேணும் சார் என்றான். நான் யுவி எடுத்து கொடுத்தேன். அவர் என்னை இளக்காரமாய் பார்த்து சச்சின் வேணாமா என்றார். நான் எனக்கு யுவி புடிக்கும் என்றேன். சச்சினை விட யுவி புடிக்குமா என்றார். ஆமாமென்றேன்.
இப்போது அவர் என்னை முறைப்பது போல இருந்தது. அதற்குள் என் தாய் எனக்காக அழகாக ஒரு சிவப்பு சட்டை எடுத்து வைத்து இருந்தா. சத்தம் போடமா போய் அத எடுத்திட்டு வந்திட்டேன்.
ரெண்டு வாரம் கழிச்சி ஒரு சின்ன பையன் அந்த யுவி டி-ஷர்ட்'ஐ(மை ஷர்ட் சைஸ் இஸ் 36 ) போட்டு இருந்தான் ! என்னால் வாங்க முடியாததை அவன் எப்படி வாங்கினான் என்று யோசிக்க தோணவில்லை :)
No comments:
Post a Comment